அற்றம் Attem ezine 01

Contributors to this issue:
தான்யா
மைதிலி
பிரதீபா கனகா தில்லைநாதன்
சந்திரா நல்லையா
சத்யா
ராகுல் சந்திரா
கவுசலா

‘கொடி’

‘கொடி’ திரைப்படத்தில் திரிசாவை வில்லியாக்கிய தார்ப்பரியத்தை யோசிக்க வேண்டியது முக்கியமானது. ஏனெனின், தமக்கான இடத்தை பிடிக்க ஆண்-மைய்ய கட்சிகளுள் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களோ கேள்விகளாக எழுகின்றது: ஏன் அவள்களுடைய காதல், கல்யாணம் மற்றும் அவர்களது எல்லாஉணர்வுகளையும் பூர்த்தி செய்து தமக்கு பிடித்தமான அரசியலில் செயற்பட முடியாமலிருக்கின்றது, ஏன் அரசியலில் வெற்றிபெற்றிருக்கின்ற பெண்கள் சிங்கிளாக இருக்கின்றார்கள், உண்மையில் இது அவர்களது தேர்வா? ஏன் அவர்கள் மட்டும் முழுநேர பங்களிப்பாளராக இருக்க வேண்டும்  என்று எதிர்பார்க்கப்படுகின்றது? அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கில்லாரியிடம் […]

பெண்விடுதலை தொடர்பான சிக்கல்கள்

[Guest Column] நாம் பொதுவாக பெண்விடுதலை பற்றிய விடயங்களை பேசும்போது சில விடயங்கள் திரும்பத் திரும்ப வருவதை அவதானிக்க முடிகிறது. பெண்களே பெண்விடுதலைக்கு முதல் எதிரிகள்! பெண்ணொடுக்குமுறை என்பது ஒரு ‘அமைப்புமுறை’ (System) சம்பந்தப்பபட்ட பிரச்சனை என்பதால் நாம் தனிப்பட்ட ஆண்களை இதற்கு காரணமாக கூறக்கூடாது!! பெண்ணடிமைத்தனம் என்பது தனிச்சொத்துடை தோன்றியதுடன் உருவானதால், ஒரு சோசலிச புரட்சியில் தனிச்சொத்துடமை அழிக்கப்படும்போதே ஒழிக்கப்படக்கூடியது. ஆதலால் நாம் பெண் விடுதலை என்பதை வர்க்க விடுதலையின் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்தலாம்.!!! இந்த […]

சந்திரா நல்லையா கவிதைகள் 02

நாங்கள் காத்திருக்கிறோம் புதிய விடியலுக்காய் அவர்கள் தூசு துடைக்கிறார்கள் தூர்ந்து போகும் துளைகளை பெருப்பிப்பதற்கு….. கண்ணகிக்கு சிலையாம் பத்தினி தெய்வமாம் இந்த மகுடங்களை சூட்டித்தானே பெண்களை இரண்டாம் படிக்கு புறம் தள்ளினீர்கள் இன்னுமா… இன்னுமா… நெறி தவறிய கோவலனுக்காய் கண்ணகி மதுரையை எரித்தது நீதி என்றானபோது ஏன் முள்ளிக் கடலில் தனி ஒருவனுக்காய் நாற்பதாயிரத்தை கொன்றது அநீதியானது…. மன்னன் நீதி தவறினால் மக்களுக்கு தண்டனை இந்த வேடிக்கை மனிதரை நினைக்கையில் வெட்கமாய்.. வெட்கமாய் .. நான் சிறகு […]

சந்திரா நல்லையா கவிதைகள்

கனவும் நிஜமும் அடுக்கு மாடிகள் இடிந்து விழ- நான் நசிந்து மரணித்த நாட்களோ ஏராளம் நான் போடும் மரண ஓலம் கேட்டு என் உறவுகள் ஓடிவரும் என்னருகில் கண் விழித்தால் கனவு என கொண்டாடும் மனசு…… இன்று அலுவலகத்தில் அதி குளிரூட்டியில் அடைபட்டுப்போனேன் அதிர்ச்சி மேலிட நான் போட்ட ஓலத்தின் ஒலி வெளிச்சிதறவில்லை மீண்டும் மீண்டும்…… அடுத்த கணத்தில் எழுந்த தெறிவினை இழுத்து பெட்டியால் இடித்து உடைத்தேன் உட்பூட்டை……. பல நிமிடங்கள் பறந்தோடியது ஆனாலும் என் மனசு […]

மை.தா கவிதைகள்

01 அனல் கவியும் சான்ரோ கிளாராவில் உனைக் காண்பதென் பாக்கியம். சிலுப்பிய தலையும் சிரிக்கும் கண்களுமாய் சினக்கும் போது கூட சிரிப்பின் சுவடுகளை மறைக்கத் தெரிவதில்லை உனக்கு. இந்த ஜாலமெல்லாம் என்னிடம் செல்லாது. பற்றைக் காடுகளெங்கும் நண்பர்களுடன் சுற்றித் திரிந்திருப்பாய். தகிக்கும் பொழுதில் ஒரு பிடி சாப்பிட்டிருப்பாயோ என ஏங்கும் மனத்தினளை உதாசீனம் செய்திருப்பாய். நீண்ட இக் கரும்புக் காடுகள் அறியும் நானறியாத உன் சுவாசங்களை… எண்ணங்களை… எவ்வாறோ ஒவ்வொருவரையும் வசீகரிக்கக் கற்றுக்கொண்டுள்ளாய் உலகின் ஏதோ ஒரு […]

எனது ஜோனி எனது கிராமமாக இருந்தது – ஈவ் இன்ஸ்லர்

My Vagina Was My Village My vagina was green, water soft pink fields, cow mooing sun resting sweet boyfriend touching lightly with soft piece of blond straw. மாடு கத்தும்…. சூரியன் இளைப்பாறும்…. அன்புக்குரியவர் பொன்னிற வைக்கோல் புல் ஒன்றினால் மென்மையாய்த் தொடும் –  செழுமையான, நீரின் மெதுமை கொண்ட இளஞ்சிவப்பு வெளி; எனது ஜோனி எனது கிராமம். There is something between my legs. […]

ஓஸ்விச்சுக்குப் பிறகு

கொக்கியைப் போன்றதோர் கருமையில் கோபம் என்னை எடுத்துக்கொள்கிறது   ஒவ்வொரு நாஜியும் ஒவ்வொரு நாளும் அதிகாலை எட்டு மணிக்கு ஒரு சிறுகுழந்தையை எடுத்து காலையுணவாக அவனைத் தட்டில் பொரித்துக் கொண்டார்கள்   மரணமோ  ஓர் இலகுப் பார்வையுடன் நிகஇடுக்குள் இருக்கிற அவனது  அழுக்கை அகற்றிக்கொண்டிருந்தது   நான் உரத்துச் சொல்கிறேன் மனிதன் தீயவன். நான் உரத்துச் சொல்கிறேன் எரிக்கப்படவேண்டிய ஒரு மலர்தான் மனிதன்.   நான் உரத்துச் சொல்கிறேன் மண்ணால் நிறைந்த ஒரு பறவையே மனிதன்.   […]