ஓஸ்விச்சுக்குப் பிறகு
கொக்கியைப் போன்றதோர் கருமையில்
கோபம்
என்னை எடுத்துக்கொள்கிறது
ஒவ்வொரு நாஜியும்
ஒவ்வொரு நாளும்
அதிகாலை எட்டு மணிக்கு
ஒரு சிறுகுழந்தையை எடுத்து
காலையுணவாக
அவனைத் தட்டில் பொரித்துக் கொண்டார்கள்
மரணமோ ஓர் இலகுப் பார்வையுடன்
நிகஇடுக்குள் இருக்கிற
அவனது அழுக்கை அகற்றிக்கொண்டிருந்தது
நான் உரத்துச் சொல்கிறேன்
மனிதன் தீயவன்.
நான் உரத்துச் சொல்கிறேன்
எரிக்கப்படவேண்டிய
ஒரு மலர்தான் மனிதன்.
நான் உரத்துச் சொல்கிறேன்
மண்ணால் நிறைந்த ஒரு பறவையே மனிதன்.
மரணம் ஒரு இலகுப் பார்வையுடன்
அவனது மலவாயைச் சொறிந்தது.
நான் உரத்துக் சொல்கிறேன்
அதிசயமிக்க விரல்களையும்
ரோசாநிறத்தில் சிறு கால்விரல்களையும் கொண்ட
மனிதன் ஒன்றும் கோவில் அல்ல
அவனொரு மலசலகூடமே.
இனியொருபோதும் அவன் தனது தேநீர்க்கோப்பையை உயர்த்த விடாதீர்.
இனியொருபோதும் மனிதன் ஒரு புத்தகத்தை எழுதாதிருக்கக் கடவது.
இனியொருபோதும் மனிதனை தனது காலணிகளை அணியவிடாதிருக்குக
மென்மையான கோடை இரவொன்றில்
இனியொருபோதும் மனிதன் தனது விழிகளை உயர்த்த விடாதிருக்குக
வேண்டாம். வேண்டாம். வேண்டாம்.
இவற்றை நான் உரக்க சொல்கிறேன்
தேவன் இதனைக் கேக்காதிருக்கவும் இறைஞ்சுகிறேன்.
ஆன் செக்ஸ்ரன்
மொ-பெ ; பிரதீபாதி / 01 யூன் 2013
________________________________________________________________________________________
After Auschwitz
Anger,
as black as a hook,
overtakes me.
Each day,
each Nazi
took, at 8: 00 A.M., a baby
and sauteed him for breakfast
in his frying pan.
And death looks on with a casual eye
and picks at the dirt under his fingernail.
Man is evil,
I say aloud.
Man is a flower
that should be burnt,
I say aloud.
Man
is a bird full of mud,
I say aloud.
And death looks on with a casual eye
and scratches his anus.
Man with his small pink toes,
with his miraculous fingers
is not a temple
but an outhouse,
I say aloud.
Let man never again raise his teacup.
Let man never again write a book.
Let man never again put on his shoe.
Let man never again raise his eyes,
on a soft July night.
Never. Never. Never. Never. Never.
I say those things aloud.
I beg the Lord not to hear.
Anne Sexton