எனது ஜோனி எனது கிராமமாக இருந்தது – ஈவ் இன்ஸ்லர்
My Vagina Was My Village
My vagina was green, water soft pink fields, cow mooing sun resting sweet boyfriend touching lightly with soft piece of blond straw.
மாடு கத்தும்…. சூரியன் இளைப்பாறும்…. அன்புக்குரியவர் பொன்னிற வைக்கோல் புல் ஒன்றினால் மென்மையாய்த் தொடும் – செழுமையான, நீரின் மெதுமை கொண்ட இளஞ்சிவப்பு வெளி; எனது ஜோனி எனது கிராமம்.
There is something between my legs. I do not know what it is. I do not know where it is. I do not touch. Not now. Not anymore. Not since.
கால்களுக்கிடையில் ஏதோ ஒன்று. எனக்குத் தெரியாது அது என்னவென்று. எனக்குத் தெரியாது அது எங்குள்ளது என்று. நான் தீண்டுவதில்லை. இப்போது இல்லை. இனிமேல் இல்லை. அன்றுமுதல் என்றுமேயில்லை.
My vagina was chatty, can’t wait, so much, so much saying, words talking, can’t quit trying, can’t quit saying, oh yes, oh yes.
அது வாயாடி. எதற்கும் காத்திராது. நிறைய நிறைய சொல்லும். சொற்கள் பல பேசும். முயற்சித்தலை நிறுத்தாது. சொல்வதை நிறுத்தாது.
Not since I dream there’s a dead animal sewn in down there with thick black fishing line. And the bad dead animal smell cannot be removed. And its throat is slit and it bleeds through all my summer dresses.
எனது பிறப்புறுப்புள் – ஒரு தடித்த கரும் தூண்டில் கயிற்றினால் செத்த மிருகமொன்றை தைத்து விட்டதாய் நான் கனவு கண்ட நாளிலிருந்து இல்லை. அந்த செத்த மிருகத்தின் கெட்ட நாற்றத்தை அகற்ற முடியாது. அதன் தொண்டை வேறு வெட்டப்பட்டிருக்கிறது; என் எல்லா கோடைகால உடுப்புகளிலும் அதன் குருதி கசிந்தோடுகிறது.
My vagina singing all girl songs, all goat bells ringing songs, all wild autumn field songs, vagina songs, vagina home songs.
எனது பிறப்புறுப்பு எல்லாப் பெண் பாடல்களையும் பாடியது. ஆட்டின் கழுத்துமணிகள் ஒலிக்கும் பாடல்கள். இலையுதிர்கால காட்டுவெளிப் பாடல்கள். பிறப்புறுப்பின் வாழிடப் பாடல்கள்.
Not since the soldiers put a long thick rifle inside me. So cold, the steel rod canceling my heart. Don’t know whether they’re going to fire it or shove it through my spinning brain. Six of them, monstrous doctors with black masks shoving bottles up me too. There were sticks, and the end of a broom.
இராணுவ வீர்கள் தமது தடித்த நீளத் துப்பாக்கியை என்னுள் நுழைத்துப்போட்ட நாளிலிருந்து இல்லை. என் இதயத்தை நிறுத்திவிடும் இரும்புக் கம்பியோ குளிர் மிகுந்தது.
அதைச் சுடப் போகிறார்களா இல்லை சுழலும் என் மூளைக்குள்ளால் நுழைக்கப் போகிறார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் ஆறு பேர். கறுத்த முகமூடியுடன் அந்த அரக்கத்தனமான வைத்தியர்கள் போத்தல்களையும் என்னுள் நுழைத்தபடி… தடிகள் இருந்தன அங்கே. ஒரு விளக்குமாத்தின் முடியும்.
My vagina swimming river water, clean spilling water over sun-baked stones over stone clit, clit stones over and over.
எனது பிறப்புறுப்பு, நீந்தும் நதி நீர். சூரியன் வாட்டிய கற்களின் மேல் சிதறும் தூய நீர்.
Not since I heard the skin tear and made lemon screeching sounds, not since a piece of my vagina came off in my hand, a part of the lip, now one side of the lip is completely gone.
எனது தோல் கிழிந்து, எலுமிச்சை கீச்சொலி சத்தங்கள் எழுப்பியதை நான் கேட்ட நாளிலிருந்து இல்லை. எனது பிறப்புறுப்பின் ஒரு பகுதி என் கையோடு வந்த நாளிலிருந்து இல்லை. உள்உதட்டின் ஒரு பகுதி; இப்போது ஒரு பக்க உதடு முழுமையாய் இல்லாமல் போய்விட்டது.
My vagina. A live wet water village. My vagina my hometown.
வாழும் ஓர் ஈர நீர்க் கிராமம் எனது பிறப்புறுப்பு. அது எனது தாய்க்கிராமம்.
Not since they took turns for seven days smelling like feces and smoked meat, they left their dirty sperm inside me. I became a river of poison and pus and all the crops died, and the fish.
மலத்தினதும் சுட்ட இறைச்சியினதும் நாற்றத்துடன் அவர்கள் ஏழு நாட்கள் முறையெடுத்து தம் அசுத்தமான விந்தணுக்களை என்னுள் விட்டுச் சென்ற பிறகு; இல்லை. நான் விசமும் சீழும் நிறைந்த நதியானேன். எல்லாப் பயிர்களும் மீன்களும் இறந்தன.
My vagina a live wet water village.
They invaded it. Butchered it and burned it
down.
I do not touch now.
Do not visit.
I live someplace else now.
I don’t know where that is.
எனது பிறப்புறுப்பு ஓர் வாழும் ஈர நீர்க் கிராமம்.
அவர்கள் அதனுள் அத்துமீறினர்.
அதனை சிதைத்து; தீயிட்டுக் கொளுத்தினர்.
அதனை நான் நெருங்குவதில்லை இப்போது.
அங்கு செல்வதில்லை.
(இப்போது) நான் வேறொரு இடத்தில் வசிக்கிறேன்;
அது எங்கே என்று எனக்குத் தெரியாது.
∇