Month: July 2020
‘அங்கிருந்தவர்’ – ஓற்றோ டிக்ஸ் சிறு அறிமுகம்
போர்தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பின் அதன் நினைவாக அவர் படைத்த ‘போர்” என்கின்ற 50 படைப்புகள் யுத்தமுனையில் அவர் கண்ட – மரணத்தை, செத்துக்கொண்டிருத்தலை, ஷெல்-அதிர்ச்சிக்குள்ளான சிப்பாய்களை, ஷெல்லடிகளில் சிதறிய நிலப்பரப்புகளை, மண்ணில் அது ஏற்படுத்திய பள்ளங்களை, கல்லறைகளை – அக் கோரக் காட்சிகளை தத்ரூபமாய் வெளிப்படுத்தின. யுத்தத்தின் புகழ்பாடவோ சிப்பாய்களை மகாவீரர்களாக காட்டுவதற்கோ மாறாக அந்த ஐம்பது ஓவியங்களிலும் அத்தகைய ஒரு சூழலின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட கொடிய யதார்த்தத்தை படைப்பதே அவரது இலக்காகவிருந்தது. நேரடியாக அங்கிருந்து அதை – யுத்தத்தின் சிதைவை – கண்கூடக் கண்ட ஒருவராக, எப்போதும் அவர் போர் அகழிகளிலும் ஒவ்வொரு சண்டைக்கும் பின்னருமான விளைவுகளை வரைவதிலேயே கவனம் செலுத்தினார். தப்பித் தவறி யுத்தமுனை காட்சிப்படுத்தப்படின் அங்கே சாவின் அல்லது அழிவின் நடனம்தான் இருந்ததேயன்றி வேறெந்த வீர பிரதாபங்களுமில்லை.
From One Tamil Man To Another: A Thought Strategy (to end rape culture)
Sexual violence is a problem with all communities and the Tamil community is not exempt from it. It should be obvious that this is not a Tamil problem, or a man problem. Women are not the only victims of sexual violence—men, as well as those who identify with others genders also experience these unfortunate realities.Having said that, I write this article intending for all Tamil men to be the audience. As one of you, I can only speak to the experiences we mutually share. I want to speak to my brothers and let you know I love each and every one of you, but there’s a crucial change that we must collectively agree upon for the betterment of our community.
கொறோனா நோய் பரவலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் அதிகரிப்பும்
= நிரூபா (கனடா) = பெண்களுக்கெதிரான வன்முறைகள் மோசமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு சூழலில்தான் ஏற்கனவே பெண்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றார் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கைத் தெரிவிக்கின்றது. இன்று கொறொனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக மக்கள் எல்லோரும் உடல், உள சிக்கல்களையும் சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்ற இக் காலகட்டத்தில் பெண்கள் மேலும் அதிகரித்த வன்முறைகளை […]
Citysnaps – சில புகைப்படக் காட்சிகள்
வீடுகளுள் அடைபட்டுக் கிடக்கிற தொற்றுநோய்க்கால ரொறன்ரோவில் உள, உடல் ஆரோக்கியத்துக்கு தனியவோ நண்பர்களுடனோ பிள்ளைகளுடனோ செல்லக்கூடிய புதிய இடங்களைக் கண்டடைதல் அவசியமாகிறது. நேரத்தைக் கழிக்கச் செல்வதற்கானவையாக நகரசபையினால் conservatories, city parks, trails, public gardens – பலவும் கட்டணமற்றவை – பரிந்துரைக்கப் படுகின்றன. உரிய நோய்க்காப்பு கவசங்களுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், உங்களுக்கு சமீபமான தூரங்களிலுள்ளவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கே அத்தகைய ஒரு பயணத்தில் ரொறன்றோ நகரின் இயற்கை வெளியை பதிவு செய்கின்றன கவுசலாவின் புகைப்படங்கள். During […]
பரியேறும் பெருமாள் Review & Conversation
… Dalit Presence in Tamil Cinema தொண்ணூறுகளில் தலித் எழுத்துக்கள் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தலித் மக்களுடைய வாழ்வுமுறை, இரசனை, கல்வி என்பன ஆதிக்க சாதிகளால் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகின்றது என்பதையும் அவ்வடக்குமுறைகளுள் அடங்காத அவர்களுடைய வாழ்வுமுறையையும் அவை வெளிப்படுத்தின. இப் புதிய போக்கு ‘இலக்கியத்தில் இப்படித்தான் கதை சொல்லவேண்டும்’ என்கின்ற எழுத்து உயர்நிலையை (canon) உடைத்து வாழ்வுமுறையும் அது சார்த்த மொழியையும் முதன்மைப்படுத்தின. அதனூடாக கதை சொல்லும் முறையையும் மொழி நடையையும் மாற்றி, ‘இப்படியும் […]