துரோகம்

பிறகெல்லாம்
முன்னொருபோதும் தொடப்படாததுபோல
சிலிர்த்தது உடல் – நம்பினான்
‘நாளையும் வருவாயா
நாம் விளையாட’
என்றவன்

Reviews

நவீன காலங்களுக்குத் தகவாய் பாகுபாடுகள் தமது நிறங்களை மாற்றிக்கொள்கின்றனவே (Discrimination changes its colour according to modern times) தவிர சாதிய மனநிலை படித்த கல்வியால் பல்தேசம் செல்வதால் மாற்றத்துக்குள்ளாவதாய் தெரியவில்லை. வெவ்வேறு வடிவங்கள் எடுத்து சாதி தன்னைத் தக்கவைத்துக்கொள்வதையே காணக் கூடியதாய் உள்ளது.

ஆமைகளின் காலம்

முதலில் மனச்சாட்சியின் மூக்கை பொத்தினேன்
பொங்கும் குரூரத்துடன்
அதன் திணறலை ரசித்தபடி
மெல்ல மெல்ல ஆமையாகினேன்.

கவிதைகள் 7 – 9

சரியேதுமற்ற
பிழையேதுமற்ற
கணப்பொழுதுகளில்
ஒரு சன்னதத்தைத் தவிர்க்கத்
திராணியற்றுதிரும்
துயரே
உன்னை
எழுதிச் செல்கிறேன்
வெறும்பாடலை அவள்
பாடும் பொருட்டு

கவிதைகள் 4 – 6

நெடும்பாதையெங்கும்
துயர்செறிய தேடித்திரிந்தேன்
கருமிதழ் சொரியும்
முத்தங்களும்
எச்சில் துளிகளும்
அன்றிக்
காய்ந்துபோயிற்று
நினைவூறித் திரும்பல் கொள்கையில்
தென்பட்டதென்னவோ
கருக்கு
மட்டைகளுக்கடியில்
விரிகிற
மசுக்குட்டிகளால் கட்டுண்டவொரு
சிறு உலகம்.