துரோகம்

 முன்னொருபோதும் தொடப்படாததுபோல
சிலிர்த்ததுன் உடல் - நம்பினேன்...
இடமெல்லாம் இதழ் படப்பட முனகினாய்
இன்றுதான் முதன்முறை என்பதாய்.
எவருனையெடுத்துக் கிளர்த்தியதையோ
தம்முள் பூவிரல்
நுழைய அனுமதித்ததையோ மறைத்தாய்
பொய்யுரைக்காதும்
உண்மையை நெருங்காதும்
காதலில்
தாமரையிலை நீர் போல்
பட்டும் படாமலும் கற்றேன்
இ(ல்லாதி)ருத்தலை.
பிறகெல்லாம்
முன்னொருபோதும் தொடப்படாததுபோல
சிலிர்த்தது உடல் - நம்பினான்
‘நாளையும் வருவாயா
நாம் விளையாட’
என்றவன்
0


கற்பகம் யசோதர.
[மே 2014]

Posted on: August 20, 2020, by :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *