Month: February 2021
Attem 5 அற்றம் Fall 2020
சந்திரா
தான்யா
பிரதீபாதி
கவுசலா
பார்பரா
Intro: Wages against housework…
‘வீட்டுவேலைக்களுக்கு சம்பளம் வேண்டும்’ என்ற கோரிக்கையானது பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ள கடினமானதாகவும், தெளிவற்றதாகவும் காணப்படுகிறது. அதனை அரசியலாக பார்க்காமல் வெறும் பணம் பற்றியதாக குறுக்கியே பார்க்கப்பட்டது. இவ்வாறு குறுக்கிப் பார்ப்பதானது பெண்களது கலகத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது .
கறுப்பின ஆண்களுக்கு…
ஆம், கறுத்தப் பெண்களைப் பொறுத்தவரையில் பலவகைகளிலும் இது ஒரு தடைசெய்யப்பட்ட தலைப்பு, பேசாப்பொருள். கறுத்த ஆண்கள் மீதினில் இருக்கின்ற இந்த உலகின் பெருவெறுப்பின் விகிதம் காரணமாக அவர்களுடன் எமக்கிருக்கிற முரண்களை எங்களுக்குள் வைத்திருக்கவே நாங்களும் முயல்கிறோம். எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல், அவர்கள் தொடர்பான நியாயமான எமது விமர்சனங்களும் சேர்ந்து, ஏற்கனவே இச் சமூகக் கட்டமைப்பில் காக்கப்பட்டுவருகின்ற இனத்துவேச அடிப்படையிலான கறுப்பு-ஆண்கள்மீதான வெறுப்பிற்கு நியாயம் சேர்த்துவிடக்கூடாது என்பதால், பேசவேண்டிய தருணங்களிலும் அவற்றைப் பேசுவதைத் தவிர்த்தே வந்திருக்கிறோம்.