நானா?
அடைத்த வேலிகளை
உடைத்துத் துணிவாய்
உயிர்த்த நான் எங்கே?
திமிறி எழும்பி
ஏவாளில் ஆரம்பித்த
அடக்குமுறைகளை
காலால் மிதித்து
நிமிர்ந்த பெண்ணா நான்?
ஒட்டிப் பிறந்த அன்பையும்
சிரிப்பையும்
பிரித்தது யார்?
உறவுகள் தந்த (ஏ)மாற்றமும்
வரையின்றித் தொடரும் ஆண்களும்
வசை பாடும் சமூகமும்
போர்த்தி விட்ட பொன்னாடைகளாய்
வெறுப்பும் கோபமும்
நிரந்தரமாய் என்னுள்
- சரண்யா
02/06