பாலியல் வன்கலாச்சாரம் (rape culture) – 2

பாலியல் வன்கொடுமைகள் ஆண்களுக்கும் நடக்கக் கூடியதே என்றாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தபிறகு தெருவிலே நடக்கிற அவர்கள், தான் ஒரு பெண்ணால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துக்குள்ளாவது மிகவும் அபூர்வமானதாக இருக்கும். அதனாற்தான் “ஆண்களுக்கும்தானே நடக்கிறது” என உரையாடலை திசைதிருப்புவதற்குப் பதிலாக நாம் யார்மீதும் வன்முறை திணிக்கப்ப்டா சமத்துவ உலகையையே விரும்புகிறோம் என்பதையும் சமகாலத்தைய பெரும்பான்மை யதார்த்தம் ஆணாதிக்க கட்டமைப்பு காரணமாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் எதிரானதாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு உரையாடலைத் தொடங்க வேண்டும்.

பாலியல் வன்கலாச்சாரம் – Rape culture -1

பாலியல் வன்முறைக் கலாச்சாரம் (Rape Culture) என்பது ஒரு சமூக கட்டமைப்பாகும், அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு உட்பட இதர பாலியல் வன்கொடுமைகள் இயல்பாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் என்பது பாலியல் வன்முறையைப் பற்றியது மட்டுமல்லாது அது பாலியல் வன்முறையாளர்களைப் பாதுகாக்கும் சமூக நிறுவனங்கள் மற்றும் கலாச்சார இயல்புகளைப் பற்றியது. அதாவது பாலியல் வன்கொடுமைகளைச் செய்பவரை விடுத்து அதற்கு உள்ளானவர்களை குற்றம்சாட்டும், அதை நியாயப்படுத்தும் எம் கலாச்சார இயல்புகளையும் பற்றியதும் ஆகும்.

வலியின் சுரங்கள்

ஆம், மானுடப் பண்புகொண்ட நாகரீகமே வாள் வெட்டில் வீழ்ந்து கிடந்தது.
மனித குலத்தின் கொடூரப் பண்புகள் குருதியாக வழிந்தோடியது…..

குருதியில் நீந்தும் மீன்கள்

ஈழத்தில் உருவாக்கப்பட்ட சினிமாக்களில் சிங்களமொழிப் படங்கள் நிகழ்த்திய திரைமொழிப்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழியில் செய்யப்பட்ட முயற்சிகள் நாடகீயமானவை அல்லது ‘நாங்களும் இருக்கிறோம்’ என்கிற வகைக்குள் அடங்கிப் போகிறவை. ஆனால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் அதுவும் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வெளியாகிற குறும்படங்கள் தொழிநுட்ப ரீதியிலும், திரைமொழியிலும், கதைத் தெரிவுகளிலும் தனித்துத் துலங்குகின்றன. உண்மையில் ஈழத்தவர்களால் உருவாக்கப்படும் சினிமாக்களில் சகிக்க முடியாமலிருப்பது வசன உச்சரிப்புத்தான். ஆனால் ஐரோப்பாவிலிருந்து அதுவும் குறிப்பாக பிரான்சிலிருந்து வெளியான குறும்படங்கள், முழு நீளப்படங்கள் இயல்பான ஈழத்தமிழ்ப் பேச்சுவழக்கைத் திரையில் ஒலித்தன. அவை ஈழத்தமிழ்த் திரைக்கு புதிய வீச்சை அளிக்கின்றன.