Month: June 2021
சிறுவர் கதைகளும் சமூகநீதியும்
பயிர்ச்செய்கையில் பூச்சியைக் கொல்லும் கிருமிநாசினிகள் தம் உணவை எதுவும் செய்யாதென நம்ப வைக்கப்பட்டதுபோல, ஒரே கூரையின் கீழ், தம் நடத்தைகளில் தெறிக்கும் வன்முறையின் விசத்தன்மை தம் பிள்ளைகளை தாக்காதென்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். பிள்ளைகளால் உணரக்கூடிய தூரத்துள் எல்லாமே நடந்துகொண்டிருக்கையில் பெரியவர்கள் இருந்து கேட்கிறார்கள்: சிறுவர்களிடம் நாங்கள் எதைச் சொல்லலாம்?
சுயமரியாதைமாதம் 2021: Pride with a Purpose
பால்புதுமையினர் என்போர் யார் என்று நோக்குவோமாயின், அது பால் (sex), பாலினம் (gender) மற்றும் பாலீர்ப்பு(sexuality) அடிப்படையில் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்படுகின்ற ஓர் சிறுபான்மை சமூகம். எமது தமிழ்பேசும் சமூகத்தில் ஆண் (male), பெண் (female) எனும் பால்களும், மாறாப்பாலினத்தவர்கள் (cisgender) உம் எதிர்பாலீர்ப்புள்ளோர் (heterosexual people) உம் சாதாரணமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடையிலிங்கம் உடையோர் (intersex people) போன்ற வேறுபட்ட பாலுடையோரும், திருநர்(transgender), பால் திரவநிலையுடையோர் (gender fluid people) போன்ற வேறுபட்ட பாலினம் கொண்டோரும், தன்பாலீர்ப்புள்ளோர்(homosexual people), பாலீர்ப்பு அற்றோர் (asexual people) போன்ற வேறுபட்ட பாலீர்ப்புக் கொண்டோரும் பால்புதுமை சமூகத்தில் உள்ளடக்கப்படுகின்றார்கள். இதனைச் சுருக்கமாக LGBTQIA+ சமூகம் எனக் குறிப்பிட முடியும்.
வாழ்க வாழ்க
‘என்னதான் இருந்தாலும் திமிரெடுத்த ஆம்பிளைகள கால்கள்ள விழவைச்ச கெட்டிக்காரி’ என வந்திருந்தவர்கள் மெச்சுகிற இடங்களில் தலைவி ஜெயலலிதாவாகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டின் எந்த பெரும் கட்சியின் அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் நடப்புகளுக்கும் பொருந்துகிற யதார்த்தமாகவே முழுக்கதையும் இருக்கிறது.
Attem 6 அற்றம் Winter 2020-21
CONTRIBUTORS
– சந்திரா – Chandra
– அறிவொளி – Arivozhi
– சரண்யா – Saranya
– அந்தாரா – Antara
– த.அகிலன் – T.Agiilan
– தான்யா – Thanya
– கௌசலா – Kavusala
– பிரதீபாதி – Pratheepathi