— பெனி — (சிறுகதை)

அதிகாலை மூன்று மணிக்கு பெல்லா முழித்தபோது தலையை முழங்காலில் புதைத்தவாறு தரையில் நடுங்கிய நிலையில் பெனியைக் கண்டாள். “மழை பெய்யுது” “இடி முழக்கமா இருக்கு” என்றான்.
“யுத்தத்தில சண்டை பிடிச்ச ஒரு ஆம்பிள ஒரு சின்ன மழைக்கெல்லாம் பயப்பிடேலாது” அவள் சொன்னாள்.
“ஓ பெல்லா…பெல்லா…பெல்லா” இவள் அவனது தலையைக் கோத முயன்றாள். ஆனால் அவன் வேகமாய் அவளிலிருந்து தூர விலகினான்.
“டாக்குத்தர கூப்பிட ஆள் அனுப்பட்டா?”
அவன் கிலுங்கிச்சிரித்தவாறு கேட்டான்: “சாப்பிரோட பெடியனையா?”
“ஏன் வேணாம்” அவள் கேட்டாள்.
“பெல்லா”
“பெல்லா.. பெல்லா” அவன் சொன்னான்.
“நான் பக்கத்தில யாரையும் டாக்குத்தர கூப்பிடச் சொல்லப் போறன்… அப்பிடியே இருங்க. அசையாதிங்க, இந்தா இப்ப வாறன்” என்றுவிட்டுப் போனாள். ஆனால் அவள் வந்தபோது, அவன் போய்விட்டான்.

Indigenous Genocide: Canada’s Legacy

இந்த தேசம் வஞ்சம், ஒருங்கிணைப்பு, இனப்படுகொலை மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தின் மீது கட்டப்பட்டது. இந்த உண்மையை மறைக்கிற கனேடிய அரசாங்கத்திடமிருந்து, பொறுப்பெடுக்குமாறு அழைக்கும் எதிர்ப்புக் குரல்களுக்கு பதிலாய், பலவீனமான மன்னிப்புகளும் உறுதியான மாற்றத்தை கொண்டுவராத தற்காலிக விசாரணைகளுமே ஏராளமாக வருகின்றன.

செவ்விந்தியர்கள் தாங்கிக்கொள்கின்றவை போன்று…

எனக்கு பெண் தற்பாலீர்ப்பாளர்கள்
செவ்விந்தியர்களை நினைவுபடுத்துகிறார்கள்
செவ்விந்தியரைப் போலவே
தற்பாலீர்ப்பாளரும் அழிந்துபோய்விட வேண்டியவர்கள்
அல்லது மறக்கப்படவேண்டியவர்கள்
அல்லது
அனுதினமும் குடிபோதையிலோ
உடைந்து சிதறுண்டவோ
தாம் போகாவிட்டால்
தமக்கு என்னாகும் என்பதை நினைவுறுத்தி
ஏதுமற்ற எங்கோவோரிடம்
போய்த் துலைய வேண்டியவர்கள்

என்றாலும்
அவர்கள் அப்படி ஒன்றும் செய்து விடுவதில்லை
மிக மோசமானது நடக்கின்றபோதும்
அதை அவர்கள் நினைவில் வைத்தவாறும்
தொடர்ந்தும் அங்கிருக்கவே செய்கிறார்கள்