Indigenous Genocide: Canada’s Legacy
=editorial=
Although Canada may seem to be a place of peace and transparency, there is a deep history of genocide and erasure of Indigenous peoples that continues to be buried by white supremacist propaganda and imperialism.
Like so many other former British colonies, Canada was once the vast territories of many Indigenous peoples, a land rich in history and culture. Once the British began to conquer the lands through chemical weaponry and advanced technological warfare, several negotiations were made in the form of treaties to end hostilities. However, this was only a strategic move by white settlers to regroup and relaunch their assaults on Indigenous peoples. Over time, Indigenous folx were encaged in concentration camps of different kinds, having completely lost all rights over their ancestral lands and traditions.
Canada positions itself as non-religious and non-genocidal, yet from the 1800s, residential school systems run by religious authorities were put in place to cause further displacement. At this point, Indigenous traditions were outlawed and most Indigenous peoples lived on reservations, which were plots of land with very little resources, where the Canadian government could control them. Residential schools added to this by being made compulsory for all Indigenous children, forcing them away from their families and homes. It didn’t help that these schools were purposefully placed in very distant locations away from the reservations. These children would spend their entire youth at these white institutions to be forced to learn English or French and to adopt a European way of life.
These were not simple schools of European teachings, but of mass assimilation where abuse and death were rampant. These schools would enslave the Indigenous children to a life of brutal labour, forcing them to grow and farm their own food, build and repair structures, dig their own graves, work the furnace, and use their bodies as insulation for the institutions when they were deemed ready to die. Boys and girls alike also faced constant rape and sexual violence, with girls being especially targeted by teaching staff and clergy alike. They would also be sterilized while boys would be castrated. This was all intentionally planned to keep up a cycle of traumatization that would invoke mental and physical illness upon the Indigenous children. Thus, residential schools acted not just as a way of erasing Indigenous practices and languages, but to also minimize and control their future populations. This generational systemic oppression would be a success, leaving survivors and their successors to be completely removed from their cultural heritage and to be perpetually unwelcomed by mainstream Canadian society.
The residential school system and its lack of acknowledgment by “Canada” is major evidence of the erasure of Indigenous Culture. This false nation hides the fact that it was built upon deceit, assimilation, genocide, and white supremacy. With each call for accountability by Indigenous survivors and their allies from the Canadian government comes a plethora of weak apologies and temporary investigations with no concrete change.
Now in 2021, with the appearance of mass graves at residential schools, many folx have taken up these issues of mass Indigenous death with more severity due to social media and greater accessibility to progressive knowledge sources, which didn’t exist in the era of colonization. Despite the Canadian government being very conscious of the mass death of Indigenous children due to the residential school system, they waited in ignorance, hoping that society would forget. Currently, there are 3,200 bodies found at various residential school locations, with a huge potential of about 30,000 more that need to be searched for. This is not including adults and bodies that are unrecoverable due to being cremated, drowned, or otherwise hidden. This isn’t about Canada “discovering” these bodies, but rather, being caught for atrocities that they have carefully buried.
Reactions to these gravesites would be church burnings, destruction of Canadian monuments, and street and building renamings. Alberta Premier Jason Kenney would dub the church burnings, which had no casualties, as an act of violence and hatred, totally numb to the cause of these reactions. Thus, the state of these buildings is given more importance than to the thousands of Indigenous lives lost. Monument destruction has been very popular and needed in at least removing the ways white society honours genocidal figures such as John A. Macdonald and Henry Dundas. Unfortunately, aside from the ongoing findings of the bodies of Indigenous children, more weak apologies, and some extremely minor financial compensation, there is no direct action from the Canadian government of Justin Trudeau. It is a hope, however, that these mass graves and their history will spark new generations of social justice workers to continue pushing efforts to effectively give back independence to Indigenous communities.
கனடா அமைதி மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட இடமாகத் தோன்றினாலும், வெள்ளை மேலாதிக்கப் பிரச்சாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் புதைக்கப்பட்டு வரும் இனப்படுகொலை எனும் பூர்வீக மக்களை அழித்த ஆழமான வரலாறு இதற்குளது.
பல முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே, கனடாவும் ஒரு காலத்தில் பல பூர்வீகக் குடி மக்களின் பரந்த பிரதேசமாக இருந்தது, இது வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த நிலம். இரசாயன ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பப் போர் மூலம் பிரித்தானியா நிலங்களை கைப்பற்றத் தொடங்கியவுடன், போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தங்கள் வடிவில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எவ்வாறாயினும், இங்கு குடியேறிய வெள்ளையர்களின் மூலோபாய நகர்வாக மட்டுமே இது இருந்தது. காலப்போக்கில், பூர்வீக மக்கள் தங்கள் வம்சாவளி நிலங்கள் மற்றும் மரபுகள் மீதான அனைத்து உரிமைகளையும் முற்றிலுமாக இழந்தனர்.
கனடா தன்னை மதமற்றது மற்றும் இனப்படுகொலை செய்யவில்லை, எனக்கூறிக்கொண்டாலும், 1800களில் இருந்து, மத அதிகாரிகளால் நடத்தப்படும் பள்ளிவிடுதிகள் ஊடாக பூர்வீக மக்களது மறைமுக இடப்பெயர்வை நடைமுறைப்படுத்தியது. இக் காலகட்டத்தில், பூர்வீக மரபுகள் சட்டவிரோதமானது, பெரும்பாலான பூர்வீக மக்கள் பல்வேறு வகையான வன்முறைகளை அவர்கள்மீது நடத்திய ஒதுக்குப்புற குடியேற்றங்களில் அடைக்கப்பட்டனர். அவை மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட நிலப்பகுதிகளாக இருந்தன, அங்கு கனேடிய அரசாங்கம் அவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்த முடியும். அனைத்து பூர்வீகக் குழந்தைகளையும் அவர்களது குடும்பங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறுவதை கட்டாயப்படுத்துவதன் மூலம் வீடுகளிலிருந்து தொலைவில் பள்ளிவிடுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிகள் பூர்வீகருக்குரிய இட ஒதுக்கீட்டிலிருந்து தொலைதூர இடங்களில் வேண்டுமென்றே வைக்கப்பட்டன. இந்த குழந்தைகள் தங்கள் இளமைக்காலம் முழுவதையும் இந்த வெள்ளை நிறுவனங்களில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியைக் கற்கவும் ஐரோப்பிய வாழ்க்கை முறையை பின்பற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
இவை ஐரோப்பிய போதனைகளின் எளிய பள்ளிவிடுதிகள் அல்ல, மாறாக துஷ்பிரயோகம் மற்றும் இறப்பு பரவலாக உள்ள ஒரு அரசியல் ஒருங்கிணைப்பு. இந்த பள்ளிகள் பூர்வீகக் குழந்தைகளை கொடூரமான உழைப்புக்கு உட்படுத்தி, கட்டிறுக்கமான கத்தோலிக்க நடைமுறைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்முறையை எதிர்கொண்டனர், சிறுமிகள் குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் மதகுருமாரால் குறிவைக்கப்பட்டனர். பலவகைகளில் இப்பள்ளி விடுதிகள் பூர்வீகர்குடிகளது பழக்கவழக்கங்கள் மற்றும் மொழிகளை அழிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால மக்கள்தொகையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டன என்றால் மிகையில்லை.
இந்த தேசம் வஞ்சம், ஒருங்கிணைப்பு, இனப்படுகொலை மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தின் மீது கட்டப்பட்டது. இந்த உண்மையை மறைக்கிற கனேடிய அரசாங்கத்திடமிருந்து, பொறுப்பெடுக்குமாறு அழைக்கும் எதிர்ப்புக் குரல்களுக்கு பதிலாய், பலவீனமான மன்னிப்புகளும் உறுதியான மாற்றத்தை கொண்டுவராத தற்காலிக விசாரணைகளுமே ஏராளமாக வருகின்றன.
துரதிருஷ்டவசமாக இப்போது தோண்டப்படும் தேவாலயங்களில் கண்டெடுக்கப்படும் குழந்தைகளின் எலும்புகள், பலவீனமான மன்னிப்பு மற்றும் சில மிகச்சிறிய நிதி இழப்பீடுகளைத் தவிர, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கை எதையும் தூண்டவில்லை. எவ்வாறாயினும், இந்த வெகுஜன கல்லறைகள் மற்றும் அவற்றின் வரலாறு புதிய தலைமுறை சமூகநீதிப் பணியாளர்களைத் தூண்டுகிறது, பூர்வீக மக்களின் சுயாதீனமான இருப்பை மேம்படுத்தும் முயற்சிகளை அவர்கள் மென்மேலும் முன்னெடுப்பார்கள். வேறெப்போதுமில்லாமல் அம்மக்களின் எழுச்சி பரவலாகும் காலம் இதுவே. தேவாலயங்கள் எரியும் தேசத்தின் ஸ்தாபகர்கள்களது திருஉருச் சிலைகள் விழுத்தப்படுவதுமான எமது காலத்தில், காலனியவாதிகளது பெயர்களை அகற்றித் தெருக்களுக்கு பள்ளிக்கூடங்களுக்குப் புதுப்பெயர் சூட்டக்கோரும் கோரிக்கைகள், எதிர்ப்பு நிகழ்வுகளுள் நாமும் தோழமையுடன் இணைந்து நடப்போம்…..
தோழமையுடன் In Solidarity,
அற்றம் குழு/ Attem Team
Posted on: October 5, 2021, by : admin