Attem அற்றம் 14: March 2022

= Transition Stories – Gemma
= Poems – Saranya
= Drive My Car review – Pratheepathi
= Remembering Saadawi (1931 – 2021)
= Art & Photographs – Kavusala, Thanya, Yousif, Sathiyan, Gemma Starlight of the Dark Star

Remembering Nawal el Saadawi

(ஆக்கிரமித்து/கையகப்படுத்தி வைத்திருக்கும்) அதிகாரங்களையோ வளங்களையோ அவற்றை வைத்திருக்கிற யாரும் விட்டுத்தர விரும்பர். “குடும்பங்களிலுள்ள ஆண்களுடனோ முதலாளித்துவத்துடனோ – இதுதான் எல்லோரதும் போராட்டம். இது அதிகாரம் தருகிற சக்தி சம்மந்தப்பட்டது. அதிகாரசக்திகளை நீங்கள் கட்டுரைகளாலோ சொற்களாலோ மாற்ற முடியாது. அவர்கள் தமது சொந்த தேர்வாக அதிகாரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அது வீட்டிலிருக்கிற கணவனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, அதிகாரத்தை அதிகாரத்தால் தான் அகற்ற முடியும். மக்கள் ஒருங்கிணைந்து வீதிக்கு வந்து தமது அதிகாரத்தை – சக்தியை – காட்டியதால் மட்டும்தான் முபாராக் ராஜினாமா செய்தார். வீதிக்கு வந்தவர்கள் சில நூறு பேர்தான் எனில் அவர் ஒருகாலும் போயிருக்க மாட்டார். ஆனால் 20 மில்லியன் மக்கள், முழு தேசமும், வீதிக்கு வந்தது. அவருக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. அதிகாரசக்திகளை நீங்கள் குறைந்த வலுவைக் கொண்டு அழிக்க முடியாது. அறிவும் ஐக்கியமும் (Knowledge and unity) மக்களின் கைகளில் பெரும் அதிகார சக்தியாகும்.”

சரண்யா கவிதைகள்

இன்று பெருவெளியில் நான்
எவன் காலுக்குள்ளும் மிதிபடவில்லை,
அழியவில்லை.
வெளிக்காற்றின் அதிவேகத்தில்
அடிபட்டுச் சுழல்கிறேன், பறக்கிறேன்.
வேகக் குறைவில்
காற்றின் அமைதியில்
காலத்தின் மாற்றத்தில்
மீண்டும் தரைக்கு வர
தனிமையிலோ எவரின் பிடிக்குள்ளோ.
அதுவரை
சுதந்திர வெளியில்
சிட்டுக் குருவியாய்.

Drive My Car: சில குறிப்புகள்

பின்னால் அவசரமாக வருகிற சாரதியைப்போல வருகிற, அவசரமாக செல்லவோ சொல்லவோ விரும்புகிற கதைகள் போலவன்றி அன்றாடத்தை எடுக்கையில் – அவற்றை எடுக்கிற படங்கள் – ஒரு வேகத்தடையைத் தமக்கும் போட்டு பார்வையாளரையும் தமக்குள் நிலைநிறுத்திக்கொள்கின்றன அல்லது கொள்ள முயல்கின்றன. இதை ஒரு றோட் திரைப்படம் (road film) ஆகவும் வகைப்படுத்தியிருந்தாலும்  வாழ்வின் முடிவற்ற பயணங்களில் அதன் அர்த்தங்கள் குறித்த -தத்துவார்த்த தேடல்களில் ஈடுபடும் இன்னொரு அனுபவமாகவே எம்முன்  விரிகிறது.