அற்றம் attem journal (whole issues)

As working women of colour, our time and space are very limited for intellectual and creative pursuits.  Many of us do not share the same privilege as some others in having a space at home that allows us to sit and do our works without any guilt towards leaving domestic work or caregiving/childcare behind. Four […]

Attem அற்றம் 14: March 2022

= Transition Stories – Gemma
= Poems – Saranya
= Drive My Car review – Pratheepathi
= Remembering Saadawi (1931 – 2021)
= Art & Photographs – Kavusala, Thanya, Yousif, Sathiyan, Gemma Starlight of the Dark Star

Remembering Nawal el Saadawi

(ஆக்கிரமித்து/கையகப்படுத்தி வைத்திருக்கும்) அதிகாரங்களையோ வளங்களையோ அவற்றை வைத்திருக்கிற யாரும் விட்டுத்தர விரும்பர். “குடும்பங்களிலுள்ள ஆண்களுடனோ முதலாளித்துவத்துடனோ – இதுதான் எல்லோரதும் போராட்டம். இது அதிகாரம் தருகிற சக்தி சம்மந்தப்பட்டது. அதிகாரசக்திகளை நீங்கள் கட்டுரைகளாலோ சொற்களாலோ மாற்ற முடியாது. அவர்கள் தமது சொந்த தேர்வாக அதிகாரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அது வீட்டிலிருக்கிற கணவனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, அதிகாரத்தை அதிகாரத்தால் தான் அகற்ற முடியும். மக்கள் ஒருங்கிணைந்து வீதிக்கு வந்து தமது அதிகாரத்தை – சக்தியை – காட்டியதால் மட்டும்தான் முபாராக் ராஜினாமா செய்தார். வீதிக்கு வந்தவர்கள் சில நூறு பேர்தான் எனில் அவர் ஒருகாலும் போயிருக்க மாட்டார். ஆனால் 20 மில்லியன் மக்கள், முழு தேசமும், வீதிக்கு வந்தது. அவருக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. அதிகாரசக்திகளை நீங்கள் குறைந்த வலுவைக் கொண்டு அழிக்க முடியாது. அறிவும் ஐக்கியமும் (Knowledge and unity) மக்களின் கைகளில் பெரும் அதிகார சக்தியாகும்.”

சரண்யா கவிதைகள்

இன்று பெருவெளியில் நான்
எவன் காலுக்குள்ளும் மிதிபடவில்லை,
அழியவில்லை.
வெளிக்காற்றின் அதிவேகத்தில்
அடிபட்டுச் சுழல்கிறேன், பறக்கிறேன்.
வேகக் குறைவில்
காற்றின் அமைதியில்
காலத்தின் மாற்றத்தில்
மீண்டும் தரைக்கு வர
தனிமையிலோ எவரின் பிடிக்குள்ளோ.
அதுவரை
சுதந்திர வெளியில்
சிட்டுக் குருவியாய்.

Drive My Car: சில குறிப்புகள்

பின்னால் அவசரமாக வருகிற சாரதியைப்போல வருகிற, அவசரமாக செல்லவோ சொல்லவோ விரும்புகிற கதைகள் போலவன்றி அன்றாடத்தை எடுக்கையில் – அவற்றை எடுக்கிற படங்கள் – ஒரு வேகத்தடையைத் தமக்கும் போட்டு பார்வையாளரையும் தமக்குள் நிலைநிறுத்திக்கொள்கின்றன அல்லது கொள்ள முயல்கின்றன. இதை ஒரு றோட் திரைப்படம் (road film) ஆகவும் வகைப்படுத்தியிருந்தாலும்  வாழ்வின் முடிவற்ற பயணங்களில் அதன் அர்த்தங்கள் குறித்த -தத்துவார்த்த தேடல்களில் ஈடுபடும் இன்னொரு அனுபவமாகவே எம்முன்  விரிகிறது. 

Attem 13: Thurka Poetry Special

In this poetry Special, we are celebrating the Tamil poetry of Thurka a prominent female poet of the 2000s in the Tamil language in the diaspora.

Attem 11 அற்றம் Fall 2021

(11) அற்றம் attem(pt) XI ezine 09 Fall 2021:  Fall Issue – Sept 22 – December 21 2021: பெனி – சிறுகதை | Translation of “Benny” – a short story by Mordecai Richler – by Pratheepathi Orphan’s Cradle (A Short Story About My Schizophrenia) by Gemma Starlight of the Dark Star குன்னிமுத்து நாவல்: மாதவிடாய் இன்மை (Amenorrhea) சில […]

Portable homes: உடல் உறுப்புகளுக்கு எழுதிய கடிதங்கள்

கடிதம் 01 அன்புக்குரிய எனது புன்னகையே…. எங்கு போய் விட்டாய்? உன்னைக் கண்டு நாளாகிவிட்டது. முன்பு நீ நாளாந்த நிகழ்வு. காலையும் மாலையும் உன்னைக் காணலாம். நாளைத் தொடங்குகிறபோது கண்ணாடியில், பின்னர் நண்பர்களுடன் உனது சிரிப்பு தொற்றாய் பரவுகின்றபோதும் இரவில் குட்டித்தம்பிக்கு பள்ளிவேலையில் உதவுகிறபோதம் என உன்னைக் காணலாம். ஒரு மோசமான நாளை எதிர்கொண்டவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள். நீயற்று அவர்களை ஒருபோதும் காண விரும்பியதில்லை நான். இப்போது நிறையப்பேர் அது எங்கு போனதென என்னைக் கேட்கிறார்கள். […]

மாதவிடாய் இன்மை சில குறிப்புகள்

குன்னிமுத்து நாவல் 1. தமிழக கேரள எல்லையில் அமைந்ததான நிலப்பரப்பில் நிகழ்ந்தவற்றை ஒரு காலகட்டத்தின் பதிவாக மனித மனங்களின் உள்ளேயும் அவர்களது பொது அரசியல் வெளியிலும் என அகமும் புறமுமாக பரந்து விரிந்து நகர்கிறது குமாரசெல்வாவின் ‘குன்னிமுத்து” நாவல் (2012, காலச்சுவடு). அந் நிலப்பரப்பில் இந்துத்துவாவின் எழுச்சி, பொதுவுடமை அரசியல், பெந்தகோஸ்து/மத அரசியல் என கதை நிலைகொண்டிருக்கிற பன்முக சூழலை உள்வாங்கி சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக கதைப்புலத்தின் நிலப்பரப்புக்குரிய பல்லாயிரம் வழக்குகள், ரசிக்கத்தக்க உவமைகளுடன் நாவலில் தமிழ் […]