— பெனி — (சிறுகதை)

அதிகாலை மூன்று மணிக்கு பெல்லா முழித்தபோது தலையை முழங்காலில் புதைத்தவாறு தரையில் நடுங்கிய நிலையில் பெனியைக் கண்டாள். “மழை பெய்யுது” “இடி முழக்கமா இருக்கு” என்றான்.
“யுத்தத்தில சண்டை பிடிச்ச ஒரு ஆம்பிள ஒரு சின்ன மழைக்கெல்லாம் பயப்பிடேலாது” அவள் சொன்னாள்.
“ஓ பெல்லா…பெல்லா…பெல்லா” இவள் அவனது தலையைக் கோத முயன்றாள். ஆனால் அவன் வேகமாய் அவளிலிருந்து தூர விலகினான்.
“டாக்குத்தர கூப்பிட ஆள் அனுப்பட்டா?”
அவன் கிலுங்கிச்சிரித்தவாறு கேட்டான்: “சாப்பிரோட பெடியனையா?”
“ஏன் வேணாம்” அவள் கேட்டாள்.
“பெல்லா”
“பெல்லா.. பெல்லா” அவன் சொன்னான்.
“நான் பக்கத்தில யாரையும் டாக்குத்தர கூப்பிடச் சொல்லப் போறன்… அப்பிடியே இருங்க. அசையாதிங்க, இந்தா இப்ப வாறன்” என்றுவிட்டுப் போனாள். ஆனால் அவள் வந்தபோது, அவன் போய்விட்டான்.

Indigenous Genocide: Canada’s Legacy

இந்த தேசம் வஞ்சம், ஒருங்கிணைப்பு, இனப்படுகொலை மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தின் மீது கட்டப்பட்டது. இந்த உண்மையை மறைக்கிற கனேடிய அரசாங்கத்திடமிருந்து, பொறுப்பெடுக்குமாறு அழைக்கும் எதிர்ப்புக் குரல்களுக்கு பதிலாய், பலவீனமான மன்னிப்புகளும் உறுதியான மாற்றத்தை கொண்டுவராத தற்காலிக விசாரணைகளுமே ஏராளமாக வருகின்றன.

செவ்விந்தியர்கள் தாங்கிக்கொள்கின்றவை போன்று…

எனக்கு பெண் தற்பாலீர்ப்பாளர்கள்
செவ்விந்தியர்களை நினைவுபடுத்துகிறார்கள்
செவ்விந்தியரைப் போலவே
தற்பாலீர்ப்பாளரும் அழிந்துபோய்விட வேண்டியவர்கள்
அல்லது மறக்கப்படவேண்டியவர்கள்
அல்லது
அனுதினமும் குடிபோதையிலோ
உடைந்து சிதறுண்டவோ
தாம் போகாவிட்டால்
தமக்கு என்னாகும் என்பதை நினைவுறுத்தி
ஏதுமற்ற எங்கோவோரிடம்
போய்த் துலைய வேண்டியவர்கள்

என்றாலும்
அவர்கள் அப்படி ஒன்றும் செய்து விடுவதில்லை
மிக மோசமானது நடக்கின்றபோதும்
அதை அவர்கள் நினைவில் வைத்தவாறும்
தொடர்ந்தும் அங்கிருக்கவே செய்கிறார்கள்

நாம் தனித்திருக்கையில்………

கனடாவின் முதல் பிரதமர் மற்றும் தேசத்தின் தந்தை என வரலாற்றில் பதியப்பட்டவரும் சமகாலத்தில் இனப்படுகொலையின் சூத்திரதாரி என கட்டுடைக்கப்பட்டவருமான ஜோன் ஏ மக்டோனால்ட் பாராளுமன்றத்தில் கூறிய பிரபலமான மேற்கோளில் அவர் மிகவும் தெளிவாக தமது நோக்கத்தை முன்வைக்கிறார்: இக்காட்டுமிராண்டிகளது பிள்ளைகளுக்கான பாடசாலை அவர்களுக்கென ஒதுக்கப்பட்டவிடங்களில் அமைக்கப்படக்கூடாது, ஏனெனில் அப்படி அமைத்தால் அவர்கள் அவர்களது பெற்றோர்களாகிய காட்டுமிராண்டிகளுக்கு அருகில் இருப்பதுடன் அக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குரிய பயிற்சியையும் சிந்தனையோட்டத்தையும்தான் இயல்புகளாய் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்னதான் எங்களது மேற்கத்தைய கல்வியை எழுதப் படிக்கப் கற்றாலும், எழுதப்படிக்கத் தெரிந்த ஒரு காட்டுமிராண்டிகளாகவே இருப்பர். இதனால் நாம் மிகவும் கவனமாக அவர்களது பெற்றோரின் சகவாசத்திலிருந்து அவர்களை விலக்கி அவர்களை வெள்ளையர்களான நமது பழக்கவழக்கங்களை தகவமைக்கவல்ல பயிற்சிக்கூடங்களில் போடவேண்டும் (1883).

தாய்மை மற்றும் காமம்

சுதந்திரம் பெற்ற மனிதர்கள் சுதந்திரமாக தமது இருப்பைக் கொண்டாடியபடி வாழவே விரும்புவார்கள்.
சமகாலத்திலும் சென்ற காலங்களைப் போல பச்சோந்திகளாய் இவ் அமைப்பினுள் அதன் விதிகளுக்கமைய ஒளிந்துமறைந்து ‘களவாக’ தமது வாழ்வை வாழ வேண்டியிருப்பதை கிஞ்சித்தும் விரும்பார்கள். திருநர்களது உரத்த இருப்பும் அத்தகையதே. குறிப்பாக திருநங்கைகள் தாம் தமது இருப்பை அடையாளங்கண்டு உரிய மாற்று சிகிச்சைகளுக்குட்பட்டு தமது அடையாளத்தை பெறுகிறபோது அதுவரைகால் தாம் மறைவாய் ஏங்கியிருந்த அதன் வெளிப்படைத்தன்மையை சுதந்திரமாக அனுபவிக்கவே விரும்புகிறார்கள்.

சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும்

Essay on Witch hunt and on the book by Silvia Federici “Caliban and the Witch”
“அக்கால கட்டங்களில் மக்கள் வறுமையினால் பெரும் கஸ்டங்களை அனுபவித்தார்கள். அதேவேளை பலவித நோய்த்தொற்றுக்களும் ஏற்பட்டன. மனநிலை பாதிப்பிற்கும் உட்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு அப்பகுதியில் வாழ்ந்த பெண்களால் இயற்கை முறையில் மருத்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு பெண்கள் சுதந்திரமாகவும், ஆற்றல் கொண்டவராகவும், பொருளாதார பலம் வாய்ந்தவராகவும் முன்னேற்றம் வகித்தார்கள். ஆனால் சமூக அமைப்பானது மதசார்பான கருத்துக்கும் ஆண்மைய வாதத்திற்கும் முதன்மை அளிக்கும் நிலையிலேயே இருந்தது. இதனால் ஆண்கள் இயல்பாக பெண்களைவிட உயர்ந்தவர்களாயும், பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவும் வாழ்வதையே விரும்பினார்கள். இதற்கு மாறாக பெண்கள் பொதுவெளிக்கு வருவதை விரும்பவில்லை. இதனை மறைமுகமாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவே சூனியக்காரிகள் என்ற பட்டத்தை மிக கேவலமாக சித்தரித்தார்கள். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பெண்களை கண்ணியமான சமூகத்திற்கு வெளியே தள்ளுவதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள்.”

“We Summon the Moon”

We are publishing this special issue as a tribute to acknowledge their agony, but also to honour their withstanding resistance. In solidarity, we are collectively hoping for their healing, strengthening their movements in the path to their justice.
#everychildmatters
#cultural_genocide
#idle no more

பாலியல் வன்கொடுமைக் கலாச்சாரம் (rape culture) – prt 4

பாலியல் வன்முறையை சாதாரணமானதாக்குகிற நகைச்சுவை ஒருபோதும் ஏற்புடையதல்ல. உங்கள் நண்பர்கள் அவ்விதம் செய்கிறபோது அதை உடனடியாக ஆட்சேபனை செய்யுங்கள், இடையிட்டுத் திருத்துங்கள். மிக முக்கியமாக உற்ற நண்பர்களுக்குள் ஒருவரை ஒருவர் உங்களது செயல்களுக்கு வார்த்தைகளுக்கு பொறுப்பாளி ஆக்குங்கள்.