நானா?

உறவுகள் தந்த (ஏ)மாற்றமும் வரையின்றித் தொடரும் ஆண்களும் வசை பாடும் சமூகமும் போர்த்தி விட்ட பொன்னாடைகளாய் வெறுப்பும் கோபமும் நிரந்தரமாய் என்னுள்

Intro: Wages against housework…

‘வீட்டுவேலைக்களுக்கு சம்பளம் வேண்டும்’ என்ற கோரிக்கையானது பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ள கடினமானதாகவும், தெளிவற்றதாகவும் காணப்படுகிறது. அதனை அரசியலாக பார்க்காமல் வெறும் பணம் பற்றியதாக குறுக்கியே பார்க்கப்பட்டது. இவ்வாறு குறுக்கிப் பார்ப்பதானது பெண்களது கலகத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது .

கறுப்பின ஆண்களுக்கு…

ஆம், கறுத்தப் பெண்களைப் பொறுத்தவரையில் பலவகைகளிலும் இது ஒரு தடைசெய்யப்பட்ட தலைப்பு, பேசாப்பொருள். கறுத்த ஆண்கள் மீதினில் இருக்கின்ற இந்த உலகின் பெருவெறுப்பின் விகிதம் காரணமாக அவர்களுடன் எமக்கிருக்கிற முரண்களை எங்களுக்குள் வைத்திருக்கவே நாங்களும் முயல்கிறோம். எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல், அவர்கள் தொடர்பான நியாயமான எமது விமர்சனங்களும் சேர்ந்து, ஏற்கனவே இச் சமூகக் கட்டமைப்பில் காக்கப்பட்டுவருகின்ற இனத்துவேச அடிப்படையிலான கறுப்பு-ஆண்கள்மீதான வெறுப்பிற்கு நியாயம் சேர்த்துவிடக்கூடாது என்பதால், பேசவேண்டிய தருணங்களிலும் அவற்றைப் பேசுவதைத் தவிர்த்தே வந்திருக்கிறோம்.

பொதுவான ஒடுக்குமுறைகளும் பிரத்தியேக ஒடுக்குமுறைகளும்

பொருளாதாரரீதியான தமது இயலாமைகளையோ அல்லது சாதீய/இனத்துவ அடக்குமுறைகளுக்குள் உள்ளாகிற ஒரு ஆண் சாதீயத்தை/இனத்துவேசத்தைக் காக்கும் சமூகக் கட்டமைப்பு தொடர்பான தனது இயலாமைகளையோ வீட்டிலுள்ள ஒருவரில்தான் (பெண்கள், குழந்தைகள்) காட்ட முற்படுகிறான், அவர்களில் காட்டுவதே அவனது இயலுமைகளுக்குள் சாத்தியமானது.

தான்யா கவிதைகள்

இவ்வெளியில் என்னிருப்பும்
வண்ணக் கலவையாய்
திட்டுத் திட்டாய்
வரைந்து கொண்டிருக்கிறது
புதிரான ஓவியத்தை.

செனேகா போல்ஸ் மகாநாடு

மார்க்சினால் வெளியிடப்பட்ட கம்யூன் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டிலேயே செநேகா போலிங் அறிக்கையும் வெளிவந்துள்ளது.ஆனால் கம்யூன் கட்சி communist manifesto அறிக்கை மக்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படுவதுபோல் இந்த சினேகா போலிங் கென்வன்சன் (Seneca Falls Convention )அறிக்கை அறியப்படாமலே இருப்பதானது இன்றுவரை பெண்கள் புறக்கணிக்கப்படும் நிலையிலேயே உள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

எடுக்கப்படாத சுதந்திரம் (சிறுகதை)

எனது இளம் நண்பனிடமிருந்து பின்னடித்து வந்து, மெதுவாக ஆடிக்கொண்டிருந்த படகிலிருந்து கொண்டு, கோடை முடிவுக்கு வருவதை உணர்ந்தவாறு எனக்கும் விடுதலை வருமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வந்தவன் நாம் இருவரும் நெருங்குவதற்கான சந்தர்ப்பத்தைக் கைவிட்டு நான் வந்ததில் கோவத்தில் இருந்தான். நான் சில்லென்ற இரவுக் காற்றில் அசையாமல் இருந்து, அவன் உதடுகள் அசைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவனது சொற்கள் என் காதில் விழவில்லை.

Generation Y Notes (1)

அதேசமயம் பக்கத்துவீட்டு இளம்பெண் கங்கா பாபுவின்மேல் மோகம் கொள்கின்றாள். அவளுடைய இருண்ட வாழ்விற்கு பாபுவின் மீதமான காதல் பெரும் ஒளியைப் பரப்புகின்றது. அவளை உள்ளே வைத்து பூட்டிப் போகின்ற கணவனை மீறி பாபுவைத் தொடர்கின்றாள். அவளுக்கும் பாபு இல்லையென்றால் வாழ்வதற்கான நம்பிக்கைகள் கிடையாது. ஆனால் அவள் வாழ பாபுவால் தன்னை அர்ப்பணிக்க முடியாது. வாழ்தல் சங்கீதத்தை விடவும் பெரிதல்லவா? இந்த முரண், யாருக்கானது வாழ்க்கை என்பதையும், இங்கு யாருடைய காதல்/காமம் பெரிதென்பதையும் மிகத் தெளிவாய் உணர்த்துகின்றது.