பரியேறும் பெருமாள் Review & Conversation

… Dalit Presence in Tamil Cinema தொண்ணூறுகளில் தலித் எழுத்துக்கள் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தலித் மக்களுடைய வாழ்வுமுறை, இரசனை, கல்வி என்பன ஆதிக்க சாதிகளால் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகின்றது என்பதையும் அவ்வடக்குமுறைகளுள் அடங்காத அவர்களுடைய வாழ்வுமுறையையும் அவை வெளிப்படுத்தின. இப் புதிய போக்கு ‘இலக்கியத்தில் இப்படித்தான் கதை சொல்லவேண்டும்’ என்கின்ற எழுத்து உயர்நிலையை (canon) உடைத்து வாழ்வுமுறையும் அது சார்த்த மொழியையும் முதன்மைப்படுத்தின. அதனூடாக கதை சொல்லும் முறையையும் மொழி நடையையும் மாற்றி, ‘இப்படியும் […]

கொரோனா பேரழிவை ஆபிரிக்காவில்…. – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

ஆபிரிக்க கண்டத்தில் கொரோனாவின் பாதிப்பானது பல வகைகளில் அதன்மீதான முன்அனுமானங்களைத் தகர்த்துள்ளது. மக்கள் வீட்டினுள் முடக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் சகல நாடுகளையும் ஒத்ததே என்றாலும் மேற்குடன் ஒப்பிடவியலாதவாறு வறிய கண்டமாய் இருப்பதால் வறுமை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் நோயைக் கட்டுப்படுத்துவதில் மேற்கு நாடுகளைவிட பல்மடங்கில் சிறப்பான முன் ஏற்பாடுகளை பல ஆபிரிக்க நாடுகள் செய்திருக்கின்றன. எப்போதும் அதன் வறுமையிலிருந்தும் யுத்தம் மற்றும் நோயிலிருந்தும் தம்மால் காப்பாற்ற வேண்டிய கீழ்நிலையில் இருக்கும் கண்டமாகவே […]

கொரோனா பேரழிவு ஒன்றினை ஆபிரிக்காவில் அனுமானிப்பதில் உள்ள பிரச்சினைகள் –

ஏப்ரல் மாதம் நடந்த சீ.என்.என் நேர்காணல் ஒன்றில் அமெரிக்க பரோபகாரி (philanthropist) மெலின்டா கேற்ஸ் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றானது ‘வளரும்’ நாடுகளில் படுபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் எனும் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆபிரிக்க நாடுகளின் தெருக்கள் எங்கும் உடல்கள் விழுந்துகிடப்பதை தான் முன்அனுமானிப்பதாகவும் அவ் நேர்காணலில் தொடர்ந்து அவர் தெரிவித்திருந்தார். அவர் அதனை கூறிய மறுநாளே மெலின்டாவின் சொந்த நாடான அமெரிக்காவின் கொரோனா மரணங்கள் இத்தாலியின் தொகையை தாண்டிவிட்டதாக அறிவிப்பு வந்தது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஏனைய […]

கவிதைகள் 1 – 3

  1.தொலைத்த இடங்களிற்கே மீண்டும் திரும்புகிறேன் தொலைவுற்றவளே நீ ஒரு வெட்கங்கெட்ட கெட்டிக்காரி ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றைத் தவறவிடுதலில் நிபுணி இன்பம் தருபவளே பெருஞ்சுகம் கொடுப்பவளே உன் ஆன்மாவைக் குத்திக் குருதி கொள்பவனைப் போற்றுபவள் குறி கொள்ளத் தயங்காதவள்கருஞ்சுழித்த உதடுகள் கொண்டுகன்னம் குழிந்து போனவள் மாய்மாலக்காரி என்றெல்லாம்புகழடைந்தவள் சிதைபவற்றைப்பொருட்படுத்தாதே உடைவிலும் ஒளிரக் கற்றுக்கொள் 0 2. உனதுமுதுகில் ஒளிக்கோடுகளில்லை என்னாயிற்று? விடுமுறையின் அறைக்கதவுகள் உவகையுடன் கிறங்கின ஒளிபிழந்து சீறும் அலைப்படுகையிலொரு சருகென ஆடிற்று என் ஆன்மா […]

“I want to live” #blm

பொலிஸ் ஓபிசர்: வளர்ந்ததும் என்னவாய் இருக்க விரும்புகிறீர்கள்? கறுத்த சிறுவன்: உயிருடன்…

3w exhibition – call for submissions

*PLEASE NOTE THAT WE HAVE DECIDED TO EXTEND THE SUBMISSION DATE TO DEC 12TH 2017 DUE TO THE GROWING INTEREST IN SUBMISSION. Women, Windows & Wanderlust The 3Ws – 2017 Misfits’ 2nd Exhibition From the restricted scenes/views through their ‘house/home’ windows to the indirect strings of family Unit, women have come a long way with […]